Thursday, September 5, 2013

தமிழகம் - தமிழ்நாட்டு ஊர்களும் உணவுகளும்

தமிழ்நாடு பல வகை இனிப்பு, நொறுக்குத்தீனி, சிற்றுண்டி, சைவ / அசைவ சாப்பாடு, பழங்கள், காய்கறிகள் ஆகிய எல்லா உணவு வகைகளுக்கும் புகழ் பெற்றது. இக்கட்டுரை தமிழ்நாட்டு உணவு வகைகளின் சிறு தொகுப்பாகும்.

மரபு சமையல் வகைகள்
  • கொங்குநாட்டு சமையல்
  • செட்டிநாட்டு சமையல்
  • சேலம் சமையல்
  • தஞ்சாவூர் சமையல்
  • மதுரை சமையல்
  • விருதுநகர் சமையல்
  • உடுப்பி சமையல்
  • ஆந்திரா சமையல்
  • மலபார் சமையல்
இனிப்பு
  • ஆற்காடு மக்கன் பேடா : பாலில் செய்யப்பட்ட ஒரு வகை இனிப்பு.
  • திருவண்ணாமலை பாயாசம் ,போலி, சுய்யான் உருண்டை ( உள்ளே பருப்பு , திணை மாவு வெள்ளம் கலந்த உருண்டையை வைத்து மேலே அரிசி மாவை கரைத்து தயாரிக்கப்பட்ட மாவில் தோய்த்து பொரிப்பது - ஒரு பண்டைய உணவு) .
  • காரைக்கால்குலாப் ஜாமுன் : ரெடிமேட் மிக்ஸ் உதவியுடன் எளிதாக செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
  • கோவில்பட்டி கடலைமிட்டாய் : வேர்க்கடலை மற்றும் சர்க்கரைப்பாகு கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
  • சாத்தான்குளம் மஸ்கோத் அல்வா : கோதுமை, தேங்காய் சர்க்கரை, மற்றும் முந்திரி கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
  • திருநெல்வேலி அல்வா : சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், மற்றும் முந்திரி கொண்டு புலம்பெயர்ந்த வட இந்தியர்களால் திருநெல்வெலியில் செய்யப்படும் உலகப்புகழ் பெற்ற ஒரு வகை இனிப்பு.
  • தூத்துக்குடி மக்ரூன்: தூத்துக்குடியில் நிலை கொண்ட போர்ச்சுகீசியர்களின் முந்திரியும் முட்டையும் கலந்து செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
  • பாலவநத்தம் சீரணி மிட்டாய் : ஒரு வகை இனிப்பு மிட்டாய்
  • வெள்ளியணை அதிரசம் (கச்சாயம்) பச்சரிசி, வெல்லம், நெய் என கூட்டுப் பொருட்களால் செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
  • ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா : பாலை சுண்டக் காய்ச்சினால் கிடைப்பது
  • திருச்செந்தூர் சில்லுக்கருப்பட்டி : பனம்பாலில் சுக்கு சேர்த்து காய்ச்சி அச்சில் வார்த்த கருப்பட்டி
நொறுக்குத் தீனி
  • அருப்புக்கோட்டை காராச்சேவு : கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி
  • திருவண்ணாமலை எள்ளடை - அரிசிமாவு எள் கலந்து தயரிகப்பதும் ஒரு பதார்த்தம் .
  • ஊட்டி வர்க்கி : சுவை மிக்க பேக்கரி தயாரிப்பான நொறுக்குத்தீனி
  • கல்லிடைக்குறிச்சி அப்பளம் : உளுந்து மாவில் செய்யப்படும் பாதி சமைத்த நொறுக்குத் தீனி அல்லது துணை உணவு
  • காரைக்குடி தேன்குழல், மண ஓலை, அச்சுமுறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி
  • மணப்பாறை முறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி


பானம்
  • திருவண்ணாமலை பாயாசம் :பாலில் செய்யப்பட்ட ஒரு வகை இனிப்பு பானம்.
  • கும்பகோணம் டிகிரி காபி : காப்பி பில்டரில் டிகாக்சன் வடிகட்டி திடமான பால் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் பானம்
  • மதுரை ஜிகிர்தண்டா : ஜிகிர்தண்டா என்றாலே இதயத்தை குளிர வைக்கும் பானம் என்று அர்த்தம். சைனா கிராஸ் `ரோஸ் ஸிரப்', நன்னாரி சிரப், கெட்டியாகக் கொதிக்கவிட்ட பால், ஐஸ்கிரீம் சேர்த்து செய்யப்படும் பானம்
சாப்பாடு
  • ஆம்பூர் பிரியாணி : அசைவ உணவு
  • திருவண்ணாமலை  :திணை சோறு , சாமை வாரகு கொள்ளு குழம்புகள் , களி , கூழ் .
  • காரைக்குடி உப்புக்கண்டம் : ஆட்டு இறைச்சியை உலர்த்தி செய்த அசைவ உணவு
  • சிதம்பரம் இறால் வருவல் : இறால் அசைவ உணவு
  • பிரானூர் (குற்றாலம்) நாட்டுக்கோழி சுக்கா : அசைவ உணவு
  • புதுக்கோட்டை சிறுமீன் : அசைவ உணவு
  • இராமேசுவரம் மாசிக் கருவாடு : உலர்த்திய மீன் அசைவ உணவு
  • வேலூர் (நாமக்கல்) வாத்துக்கறி : அசைவ உணவு
  • கீழக்கரை நொதில் : இஸ்லாமிய அசைவ உணவு
  • மதுரை அயிரை மீன் குழம்பு : அசைவ உணவு
  • மதுரை இட்லி : சைவ உணவு
  • விருதுநகர் புரோட்டா : சைவ சிற்றுண்டி
  • திண்டுக்கல் பிரியாணி : அசைவ உணவு (தலப்பாகட்டி பிரியாணிக் கடை)
பிரசாதம்
  • திருவண்ணாமலை - கற்கண்டு சாதம் (கோவில்களில் செய்யும் முறை).
  • அழகர்கோவில் - அக்காரவடிசல் - அக்காரவடிசல் அரிசி சர்க்கரை நெய் சேர்த்து (கோவில்களில் செய்யும் முறை) செய்யும் பொங்கல்
  • காஞ்சிபுரம் - இட்லி - இட்லி (கோவில்களில் செய்யும் முறை)
  • பழனி - பஞ்சாமிர்தம் - திருப்பதி லட்டுக்கு சமமாக பக்தர்கள் மத்தியில் புகழ் பெற்றது பழனி பஞ்சாமிர்தம். வாழைப்பழம், சர்க்கரை, நெய், பேரீச்சம்பழம், எல்லாம் சேர்த்து கலந்து செய்யப்படும்.
  • திருச்செந்தூர் - சில்லுக் கருப்பட்டி - திருச்செந்தூர் பகுதியில் அதிக அளவில் பனை மரங்களிலிருந்து இறக்கப்படும் பதநீர் கொண்டு செய்யப்படும் சுவையான இனிப்புக் கருப்பட்டி.
சமைக்காத உணவு
  • கொல்லிமலை: தேன்
  • ஊத்துக்குளி: வெண்ணெய்
  • திருச்செந்தூர்: பனங்கற்கண்டு
  • வால்பாறை: தேநீர்
  • வேம்பார்: கருப்பட்டி
பழங்கள்
  • சத்தியமங்கலம்: வாழைப்பழம்
  • சிறுமலை: வாழைப்பழம் (மலை வாழை)
  • சேலம்: மாம்பழம்
  • கொடைக்கானல்: பேரிக்காய்
  • நெய்வேலி: முந்திரி
  • பண்ருட்டி: பலாப்பழம்
காய்கறி
  • அரவக்குறிச்சி: முருங்கை
  • ஊட்டி: உருளைக் கிழங்கு
  • ஒட்டன்சத்திரம்: கத்தரிக்காய்
  • ஊட்டி: முட்டைக்கோசு
  • கும்பகோணம்: வெற்றிலை
  • பொள்ளாச்சி: தேங்காய்
  • கொல்லிமலை: அன்னாசி
  • கோட்டாறு: தேங்காய்
  • தேனி: கரும்பு

No comments:

Post a Comment