Friday, August 30, 2013

தமிழகம் - பாரம்பரியம்

தமிழ்நாடு அரசு குறியீடுகள்
மொழி
தமிழ்
சின்னம்
திருவில்லிபுத்தூர் கோபுரம்
பாட்டு
தமிழ்த்தாய் வாழ்த்து
விலங்கு
வரையாடு
பறவை
மரகதப் புறா
மரம்
பனை
பூ
செங்காந்தள் கார்த்திகைப் பூ
விளையாட்டு
கபடி
ஆடல்
பரதநாட்டியம்
தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.
சுப்பிரமணிய பாரதி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, சி.வி. இராமன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், ஆர். வெங்கட்ராமன், சி. என். அண்ணாதுரை , ஈ.வெ.ராமசாமி (பெரியார்), சீனிவாச ராமானுசன், அப்துல் கலாம், பாரதிதாசன், திரு.வி.க., கண்ணதாசன், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் மாநிலத்தின் நன்கு அறியப்பட்டவர்களில் சிலராவர். இவர்களோடு, இளங்கோவடிகள், கண்ணகி, திருவள்ளுவர், தொல்காப்பியர், ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராசராச சோழன், மருதநாயகம் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும்.

No comments:

Post a Comment