Friday, August 30, 2013

தமிழகம் - பொருளாதாரம்


தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், குழாய்க் கிணறு, ஆழ் குழாய்க் கிணறு அமைக்கும் தொழில், பண்டங்களை போக்குவரவு செய்யும் கனரக வாகனங்களை இயக்கும் தொழிலுக்காகவும், சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வேலூர் தோல் தொழிலுக்கும், தஞ்சை போன்ற பகுதிகள் விவசாயத்திற்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன.

தென்தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய துறைமுகம் உள்ளது. தூத்துக்குடியில் மின்னுற்பத்தி நிலையங்களும், உர, உலோகத் தொழிற்சாலைகளும் உள்ளன. கரூரில் நெசவுத்தொழிலும் பேருந்து, சரக்குந்துகளுக்கு கூடு கட்டும் தொழிலும் நன்கு வளர்ந்துள்ளன.

பெங்களூருக்கு அருகில் உள்ள ஒசூரில் தானுந்துத் தொழிற்சாலைகள் (அசோக் லேலண்டு, டிவிஎஸ்), மற்ற இயந்திரத் தொழிற்சாலைகளும் (டைட்டன்) உள்ளன.

பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் சினிமாப் படங்கள் தமிழ் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை

தமிழ்நாடு பல முனைகளில் வளர்ச்சியடைந்து வந்தாலும் கணிசமான மக்கள் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழேயே வாழ்கின்றார்கள். 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மக்கள் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றார்கள். கால் பங்கு மக்கள் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழ் வாழுதல், பாரிய பொருளாதார ஏற்றதாழ்வு, பிற சமூகப் பிரச்சினைகள் கூட்டாகத் தமிழ்நாட்டின் ஏழ்மை நிலையைக் குறித்து நிற்கின்றன.
 

No comments:

Post a Comment